தமிழக மக்கள் உரிமை இயக்கம் (TMUI) என்பது சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசுத் துறை மற்றும் பொது நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்கள், அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கவும் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கமாகும். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. D. சத்யநாராயணன் (M.A., M.L., M.Sc., M.Phil.) அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றி வருகிறது.
Tamilaga Makkal Urimai Iyakkam (TMUI) — the Tamil Nadu People's Rights Movement — is a people's movement dedicated to legal awareness, social justice, public accountability, and free legal assistance for the underprivileged. Founded and led by President & Advocate D. Sathyanarayanan (M.A., M.L., M.Sc., M.Phil.), Member of the Supreme Court Bar Association, TMUI stands with every citizen whose rights are denied.
M.A., M.L., M.Sc., M.Phil.
நிறுவனர் & தலைவர் | உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க உறுப்பினர்
Founder & President | Member, Supreme Court Bar Association
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே தமிழக மக்கள் உரிமை இயக்கத்தின் தலையாய நோக்கம்.
TMUI bridges the gap between ordinary citizens and the justice system through legal awareness, public advocacy, and direct intervention.
ஏழை எளிய மக்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மற்றும் நீதிமன்றப் பாதுகாப்பு வழங்குதல்.
Providing free legal guidance, petition drafting, and court representation for underprivileged citizens and families.
காவல் நிலையம், வருவாய்த்துறை, பத்திரப்பதிவு மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாமதங்கள் மற்றும் அநீதிகளுக்குச் சட்டப்பூர்வத் தீர்வு.
Standing up for citizens facing inaction, delays, or harassment in police stations, revenue offices, and government departments.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் குறித்து சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்.
Conducting grassroots legal awareness camps, RTI workshops, and citizen rights programs across communities.
“சட்டம் என்பது வெறும் புத்தக விதிகளல்ல; அது நீதிக்கானதும் மனித மாண்பைப் பாதுகாப்பதற்குமான உயிர்நாடி.”
“I view the law not merely as a set of textbook rules, but as a vital framework for justice and human dignity.”
வழக்கறிஞர் D. சத்யநாராயணன் (M.A., M.L., M.Sc., M.Phil.) அவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலான சட்ட அனுபவம் கொண்ட வழக்கறிஞர் மற்றும் SB & Partners – Advocates and Legal Consultants சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் (Managing Partner) ஆவார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (Supreme Court Bar Association) மற்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினரான இவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டம் (LL.B.), பன்னாட்டுச் சட்டம் மற்றும் அமைப்பியலில் சட்ட முதுகலைப் பட்டம் (M.L. in International Law and Organization), அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் (M.A. in Political Science), கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் (M.Sc. in Computer Science) மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil. in Defence and Strategic Studies) பெற்றவர்.
அரசியலமைப்புச் சட்டம், சிவில், கிரிமினல் மற்றும் நிறுவனச் சட்டங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இவர், அரசுத் துறைகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுக்கள் (Writ Remedies) மூலம் தனிநபர் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளார்.
The Essential Cog (dsathyana.wordpress.com) என்ற சட்ட வலைப்பதிவின் மூலமாகவும், தமிழக மக்கள் உரிமை இயக்கம் (TMUI) மூலமாகவும் சாமானிய மக்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
Advocate D. Sathyanarayanan (M.A., M.L., M.Sc., M.Phil.) is a practicing advocate with over a decade of legal experience and the Managing Partner of SB & Partners – Advocates and Legal Consultants. A member of the Supreme Court Bar Association and the Bar Council of Tamil Nadu and Puducherry, his practice is built on a distinguished multidisciplinary academic foundation: Bachelor of Laws (LL.B.) from The Tamil Nadu Dr. Ambedkar Law University, Master of Laws (M.L.) in International Law and Organization, Master of Arts (M.A.) in Political Science, Master of Science (M.Sc.) in Computer Science, and Master of Philosophy (M.Phil.) in Defence and Strategic Studies from the University of Madras.
His practice spans constitutional law, civil and criminal litigation, and corporate advisory work, with renowned expertise in handling writ remedies against state agencies before various High Courts and the Supreme Court of India.
Through his legal writing on The Essential Cog (dsathyana.wordpress.com) and his leadership as President of Tamilaga Makkal Urimai Iyakkam (TMUI), he is deeply committed to stripping away complex legal jargon and making constitutional justice accessible to ordinary citizens.
அரசு அதிகாரிகளின் அத்துமீறல்கள் மற்றும் தாமதங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்.
Protecting citizen rights against administrative inaction before High Courts and the Supreme Court.
சாமானிய மக்களுக்கு அடிப்படைச் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட வழிகாட்டுதல்.
Making legal rights clear, practical, and accessible for everyday citizens across Tamil Nadu.
தமிழக மக்கள் உரிமை இயக்கத்தின் அன்றாட களப் பணிகள், பொதுமக்கள் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகை அறிக்கைகள் மற்றும் தலைவர் வழக்கறிஞர் D. சத்யநாராயணன் அவர்களின் சட்ட விழிப்புணர்வுக் கட்டுரைகள்.
Stay updated with TMUI’s daily grassroots interventions, public petitions, press statements, and legal awareness articles by Founder-President Advocate D. Sathyanarayanan.
காவல் நிலையம், வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகம், நகராட்சி அல்லது எந்தவொரு அரசுத் துறையிலும் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலோ, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தாலோ அல்லது பொதுப் பிரச்சனைகளுக்குச் சட்ட உதவி தேவைப்பட்டாலோ உடனடியாக TMUI உதவி மையத்தை (Helpline) அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப் / மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
If you or your community are facing any public legal issues, bureaucratic delays, refusal of service, or injustice with government authorities or departments, reach out directly to the TMUI Helpline via Phone, WhatsApp, or Email for immediate guidance and legal support.
அரசுத் துறை சார்ந்த புகார்கள் மற்றும் அவசர சட்ட ஆலோசனைகளுக்கு நேரடியாக அழைக்கவும்:
Call our helpline directly to report public grievances or seek legal guidance:
+91 87545 42427உங்கள் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் புகார் விவரங்களை வாட்ஸ்அப்பில் உடனடியாக அனுப்பலாம்:
Send your petition details, documents, or grievance message directly on WhatsApp:
WhatsApp: +91 87545 42427 WhatsApp: +91 87545 42427விரிவான புகார் மனுக்கள் மற்றும் பொது நலப் பிரச்சனைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப:
Email your detailed representations, public legal issues, or documents to:
dsathyana@gmail.comகீழே உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன் நேரடியாக வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வழியாக TMUI உதவி மையத்திற்கு அனுப்பலாம். Fill in your issue below to connect immediately with our legal helpline via WhatsApp or Email.
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நன்கொடையும் ஏழை எளிய மக்களுக்கான இலவச சட்ட உதவிகள், பொது நல வழக்குகள் மற்றும் சட்ட விழிப்புணர்வுப் பணிகளுக்கு 100% வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தப்படுகிறது.
Your contribution directly funds free legal aid for underprivileged citizens, public interest advocacy, and grassroots legal awareness programs across Tamil Nadu.
உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒருமுறை அல்லது மாதாந்திர நன்கொடையைத் தேர்ந்தெடுக்கவும்: Select a contribution frequency and amount below:
உங்கள் நிதியுதவி சாமானிய மக்களின் சட்டப் போராட்டங்களுக்கும் விழிப்புணர்வுப் பணிகளுக்கும் நேரடியாகப் பயன்படுகிறது:
Every contribution goes directly toward empowering citizens and fighting injustice on the ground:
இயக்கத்தின் மக்கள் பணிகளுக்கு நிதி பங்களிப்பு அளிக்க விரும்பும் தோழர்கள், கீழே உள்ள பொத்தானை அழுத்தி பாதுகாப்பான அதிகாரப்பூர்வ UPI QR ஸ்கேனரைத் திறந்து பங்களிக்கலாம்:
To support TMUI citizen initiatives, click below to open the official secure UPI QR Scanner:
அநீதிக்கு எதிராகவும் நீதியின் குரலாகவும் களத்தில் நிற்க விரும்பும் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இயக்கத்தில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Whether you are a citizen, student, professional, or advocate—join hands with us to build a society where rights are respected and power is held accountable.
Google Pay / PhonePe / Paytm அல்லது எந்தவொரு UPI செயலி மூலமும் ஸ்கேன் செய்து பாதுகாப்பாக பங்களிக்கலாம்.
Scan safely using Google Pay, PhonePe, Paytm, or any BHIM UPI app.